வியாபாரியை தாக்கி கொள்ளை

புழல்: சோழவரம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சிவகணேசன்(40). சோழவரம் ஜிஎன்டி சாலை மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை கடையை திறக்க வந்தபோது கடையில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே வந்தார். அவரை தடுத்துநிறுத்தி கேட்டபோது, அந்த நபர் சிவகணேசனை பலமாக தாக்கியதோடு, கண்ணாடி பாட்டிலை உடைத்து அவரை குத்த முயன்றார். இதனால், பயந்துபோன சிவகணேசன் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் காலை 10 மணி அளவில் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.5,000, புதிதாக விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து மழைகோட், புதிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அந்த நபர் திருடி சென்றது தெரிந்தது.

Related Stories:

>