புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு...!! முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர், புதுச்சேரி மாநிலத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் 7.5 சதவிகித ஒதுக்கிடு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது போல, புதுச்சேரி மாநிலத்திலும் நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துயப்பட்டு உள்ளது என்றார். மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>