கடன் தவணைகளுக்கு வசூலித்த வட்டிக்கு வட்டியின் தொகையை திருப்பி கொடுக்க வங்கிகளுக்கு ஆர்பிஐ அதிரடி உத்தரவு

புதுடெல்லி,:கொரோனா நோய் தொற்றை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கடன் வாங்கியோரின் தவணைகளுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டி தொகையை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் எனா நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ நிர்வாகம் உத்தரவை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கை அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத்தவணையை திருப்பி செலுத்துவதில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரை அதாவது 6 மாதம் மத்திய அரசு அவகாசம் வழங்கியது. மேலும் இந்த காலக்கட்டதில்  மாதத்தவணை செலுத்ததாதவர்களிடம் இருந்து வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் முதலாவதாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியோர் தரப்பில், மாதத்தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்ய வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது என்றும், அவ்வாறு செய்யும் படசத்தில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்த அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் ரிசர்வங்கி நிர்வாகம் ஆகியோருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஒரு சாமானியனியன் தீபாவளி உட்பட அனைத்து விழாக்களின் மகிழ்ச்சியும் நீங்கள் எடுக்கும் முடிவில் தான் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் விரைந்து ஒரு நல்ல முடிவை எடுங்கள் என உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு கடந்த 24ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட வகைகளுக்கு கடன் வாங்குபவர் இ.எம்.ஐ தடைக்காலத்தைப் பயன்படுத்தினாரா என்பதைப் பொருட்படுத்தாமல் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீதான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் வாங்கிய சிறு குறு, கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் பொருட்கள், வாகன கடன்கள், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் என அனைத்து நிலுவைகளுக்கும் இந்த வட்டி தள்ளுபடி என்பது பொருந்தும். இது கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான கடன்களுக்கு மட்டுமே ஆகும். இதில் 6 மாதத்திற்கு வங்கியின் சட்ட விதிகளின் படி முறையாக தவணையை திருப்பி செலுத்தியவர்களுக்கு கூடுதல் வட்டிக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி தரப்பிலும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நிர்வாகத்தின் தரப்பில் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், வங்கிகளில் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீது வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டிக்கான தொகைகளை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதுகுறித்த சுற்றறிக்கையையும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரையான 6 மாத காலத்தில் கூடுதலாக வசூலித்த வட்டிக்கு வட்டி மட்டும் இந்த சலுகைக்கு உட்படும் என்பதை வங்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் உத்தரவை தொடர்ந்து வங்கிகள் உடனடியாக திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் கொரோனா பிரச்சனையின் காரணமாக பொருளாதார சிக்கலில் இருக்கும் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Related Stories:

>