திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை : எச்.ராஜா கேள்வி

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவனை தமிழக அரசு  ஏன் இதுவரை கைது செய்யவில்லை. உடனடியாக திருமாவளவனை கைது செய்யாவிட்டால் கைது செய்வதற்கு பாஜக அழுத்தம் கொடுக்கும்.

இந்து மதத்தில் தான் பெண்களை தெய்வமாக கருதி வழிபாடு நடத்துகிறோம்.மூன்று நாள் லட்சுமி, மூன்று நாள் சரஸ்வதி, மூன்று நாள் துர்க்கையை வழிபட்டு வரும் நவராத்திரியின்போது திருமாவளவன் இந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பெண்கள் குறித்த கருத்தை  பேசியுள்ளார்.

இந்தப் பிரச்னை தேர்தல் நேரத்தில்  கடுமையாக எதிரொலிக்கும்.போராட்டம் வெடிக்கும். கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்த தமிழக அரசு ஏன் இதுவரை திருமாவளவனை கைது செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>