×

அடுத்தாண்டு தொடக்கத்தில் மதுரை - தேனிக்கு ரயில் சேவை துவக்கம்

ஆண்டிபட்டி: அடுத்தாண்டு தொடக்கத்தில் மதுரை - தேனிக்கு ரயில் சேவை துவங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரையில் இருந்து தேனி மாவட்டம், போடி வரை இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையை, கடந்த 2009ம் ஆண்டு அகல் ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில் நிறுத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்கீடு செய்யதாதால் ஆமை வேகத்தில் அகல ரயில்பாதை பணிகள் நடந்து வந்தது. 11 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான பணிகள் வேகமாக நடந்து தற்போது முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆண்டிப்பட்டியில் நேற்று காலை புதிதாக அமைக்கப்பட்ட ரயில்பாதையில் ரயில் வந்ததை கண்டு மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

11 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டிப்பட்டிக்கு ரயில் வந்ததால் மக்கள் உற்சாகமடைந்தனர். ரயிலில் அகலரயில்பாதைக்கு தேவையான ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மதுரையில் இருந்து தேனி வரையிலான சுமார் 75 கி.மீ அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. மிக விரைவில் சோத னை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை - தேனி வரையில் பயணியர் ரயில் சேவை தொடங்கப்படும்’’ என்றனர்.

Tags : Madurai ,Theni , Madurai, Theni, train service
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...