×

பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை?: இந்தியா - அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது.!!!

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. அதன்படி, இன்று நடக்க உள்ள 2+2 பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர். இந்தியா வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி மாளிகையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளித்தார்.

தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக டெல்லியில் உள்ள ஐத்ராபாத் இல்லத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 + 2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர்  ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய அமெரிக்க இடையே பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கு இடையே உயர் ராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்களை பகிர்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம், இந்தோ-சீனா கடல் பரப்பில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags : India ,Delhi ,talks , Important advice on regional security ?: India-US 2 + 2 talks begin. !!!
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...