நாம் நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே: திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவீட்

சென்னை: சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். மனுஸ்மிரிதி தொடர்பாக அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பெண்களை இழிவு படுத்தி பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரல் ஆனது.

இதற்கு பாஜகவினர் பலர் கண்டனம் தெரிவித்த மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இன்று சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இருப்பினும், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி-க்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை பதிவிட்டுள்ளார்.

திருமா வளவன் தீட்டிய அரிவாள்

தென்னவர் சுழற்றியதே  - அவன்

அரிமா போலே ஆர்த்த கருத்தும்

அரிவையர் வாழ்வதற்கே – அதை

அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது

அரசியல் செய்வதற்கே – நாம்

நெறியின் வழியே நீண்டு நடப்பது

நீதி நிலைப்பதற்கே என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>