×

அமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்’’.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MK Stalin , MK Stalin wishes Minister Durakkannu well
× RELATED உலக சாதனை படைத்த சிறுமி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு