×

கலந்தாய்வு மூன்றாம் சுற்று முடிவில் இன்ஜினியரிங்கில் 75% இடங்கள் காலி: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வின் மூன்றாம் சுற்று முடிவில் சுமார் 75% இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்களை நிரப்புவதற்கான இணைய வழி கலந்தாய்வு கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளை கொண்ட இக்கலந்தாய்வில் தற்போது மூன்று சுற்றுகள் முடிவடைந்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கும், கடந்த 8ம் தேதி முதல் தற்போது வரை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. மூன்றாம் கட்ட கலந்தாய்வின் தரவரிசை பட்டியல் கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் 20,999 இடங்கள் நிரம்பியதை அடுத்து மொத்தம் மூன்று சுற்று கலந்தாய்வு முடிவில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்களில் 42,421 இடங்களே நிரம்பியது. மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 35,133 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 20,999 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். இதனால் 4ம் கட்ட கலந்தாய்விற்கு சுமார் 75% இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அரசு கோட்டாவில் உள்ள 60% இடங்களும் நிரப்பப்படாமல் போக வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 40% பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை. மேலும் நேற்று முதல் 4ம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. 111.5 முதல் 77.5 இடையேயான கட் ஆப் பெற்ற மாணவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த இறுதிகட்ட கலந்தாய்வில் 40,573 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுக்கு 28ம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளன.
இது அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : round ,Directorate of Technical Education Announcement , 75% vacancies in Engineering at the end of the third round of consultation: Notice of the Directorate of Technical Education
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...