தடையை மீறி போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் உட்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: நுங்கம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கடந்த 24ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மனுதர்மம்’ நூலை தடைசெய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 30 பெண்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அளித்த புகாரின் படி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த விடுதலை ராஜேந்திரன், பொலிலன், பேராசிரியை சுந்தரவல்லி, மக்கள் அதிகாரத்தை சேர்ந்த அமிர்தா மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பாலாஜி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் உட்பட 250 பேர் மீது ஐபிசி 143, 188, 269 மற்றும் 41 சிட்டி போலீஸ் ஆக்ட் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>