பலாத்கார புகார் செய்த நடிகை பாயல் கோஷ் அதாவலே கட்சியில் இணைந்தார்

மும்பை: இந்தி சினிமா தயாரிப்பாளர் அனுராக் காஷியப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தவர் நடிகை பாயல் கோஷ். இந்த புகாரை தொடர்ந்து வர்சோவா போலீசார் தயாரிப்பாளர் அனுராக் காஷியப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகை பாயல் நேற்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே முன்னிலையில் இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்தார். நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்ததாக நடிகை பாயல் கூறினார். அனுராக் காஷியப்புக்கு எதிரான போராட்டத்தில் காஷியப்புக்கு ஆதரவு கொடுத்தவர் அதாவலே. ஆளுநரை சந்திக்க காஷியப்பை அவர் அழைத்து சென்றார். இதற்கு நன்றிக் கடனாக அவரது கட்சியில் காஷியப் இணைந்துள்ளார்.

Related Stories:

>