×

ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ், செந்தில்தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஆதித்யா முருகன், குமரவேல், செந்தில், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சூர்யா, கௌரி சங்கர், சாய்ராம், செல்வம், ஏழுமலை, கோதண்டம், தினேஷ், வசந்த், ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK , DMK Membership Admission Camp Online
× RELATED தி.மு.க. ஆலோசனை கூட்டம்