×

அசாம் சாலை விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்: அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி

காஞ்சிபுரம்: அசாமில் வாகன விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல், சொந்த ஊரான காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி நங்கை. இவர்களது மகன் ஏகாம்பரம். கடந்த 2000ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இவரது மனைவி குமாரி (35). இவர்களுக்கு ஆதித்யா (16), ஜெனி(14) என்ற மகன், மகள் உள்ளனர். சில மாதங்களில் ஏகாரம்பரம் பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி அசாமில் நடந்த சாலை விபத்தில் ஏகாம்பரம் மரணம் அடைந்தார். இறந்த ஏகாம்பரத்தின் உடல், நேற்று காலை 8 மணியளவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

தேசிய கொடி போர்த்தி கொண்டு வரப்பட்ட உடலை பார்த்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். அவரது உடலுக்கு கர்னல் சேவ்ராம் சர்மா, எஸ்பி சண்முகப்பிரியா, டிஎஸ்பி மணிமேகலை, மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர், திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் உறவினர்கள் மற்றும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து ராணவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, செம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் மதியம் 1 மணியளவில் 21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : soldier ,Assam ,hometown ,road accident , Body of soldier killed in Assam road accident buried in hometown
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்