கடைகளில் கொள்ளை

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் டி.வி டிஷ் சர்வீஸ் சென்டரில் நேற்று காலை கதவை உடைத்து அங்கிருந்த எல்.இ.டி டிவி, லேப்டாப் ஆகிவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் ஆவடி கன்னிகாபுரம் காந்தி தெருவில் உள்ள கடையின் ஷெட்டரை உடைத்து 300 பால் பவுடர் பாக்கெட்கள், ஐஸ் கிரீம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோல், திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் 2வது தெருவில் உள்ள மளிகை கடையில் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.1,500 ரொக்கம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ஆவடி, திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>