×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொன்னேரி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆலோசனைபடி, திருவெள்ளைவாயல் பஜார் வீதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் முகாம் நடைபெற்றது.
இதில் திருவெள்ளைவாயல் ஊராட்சி மன்ற தலைவர் தி.வெ.ரவிசந்திரன், வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜி.கோபி, நெய்தவாயல் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ராஜா, வாயலூர் ஊராட்சி செயலாளர் கு.தசரதன், காட்டூர் ஊராட்சி செயலாளர் ஆ.முனுசாமி, கல்பாக்கம் ஊராட்சி செயலாளர் கோ. வஞ்சி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் நிர்வாகிகள் கா.சு.தன்சிங், பா.து.தமிழரசன், கஸ்தூரி தசரதன், வாயலூர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   


Tags : DMK ,Admission Camp , DMK Member Admission Camp
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்