×

உலகின் எரிசக்தி தேவையை இந்தியா விரைவில் பூர்த்தி செய்யும்: மோடி பெருமிதம்

புதுடெல்லி: `இன்னும் சில ஆண்டுகளில் உலகின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்,’ என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்திய எரிபொருள் அமைப்பின் 4வது ஆண்டு மாநாட்டினை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
* கொரோனா தொற்றின் விளைவாக உலக எரிபொருள் தேவை மூன்றில் ஒரு பங்காக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், முதலீடு திட்டங்கள் பாதிக்கப்பட்டு, கணிக்கப்பட்டது போல், இன்னும் சில ஆண்டுகளுக்கு தேவை அதிகரிக்காது.
* ஆனால், இந்தியாவில் வருங்காலங்களில் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும். இதை பயன்படுத்தி இந்தியா சுத்தமான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும். எனவே, எரிசக்தி நுகர்வை 2 மடங்காக அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
* புதுப்பிக்கத்தக்க எரிசக்தியினால் வரும் 2022ம் ஆண்டிற்குள் 175 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படும். அதே போல், வரும் 2030க்குள் 450 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை இலக்காக கொண்டு செயல்படுகிறது.
* கடந்த 5 ஆண்டுகளில், எரிசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தக்க சீர்திருத்தங்களினால் எண்ணெய், எரிவாயு மற்றும் எரிவாயு சந்தைபடுத்துதல், ஆய்வு மற்றும் உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கும். இந்தியாவில் இத்துறையின் சீர்திருத்த மாற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிவேகத்தில் ஏற்பட்டுள்ளது.
* எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் வகையில், தற்போது ஆண்டுக்கு 25 கோடி டன்னாக இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பை, வரும் 2025க்குள் 45 கோடி டன்னாக உயர்த்தி, தேவைக்கேற்ற தற்சார்பு நிலையை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
* இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல, பாதுகாப்பானது. அதே நேரம், மலிவானது, நம்பகத்தன்மை கொண்டது.
* எரிசக்தி துறை வளர்ச்சியை மையமாக கொண்டு, முதலீட்டாளர்களுக்கு உகந்ததாக, சுற்று சூழலுக்கானதாக இருக்கும். உலக நலனை கருத்தில் கொண்டே இந்தியா எப்போதும் பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : India ,Modi , India to meet global energy needs soon: Modi proud
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி