சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எஃப்.ஐ.ஆரில் அம்பலம்

மதுரை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எஃப்.ஐ.ஆரில் அம்பலமாகியுள்ளது. ஜூன் 16ம் தேதி இரவு 7.30 மணி அளவில் வணிகர்கள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீஸ் கைது செய்தது. காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து தந்தையையும் மகனையும் காவலர்கள் தாக்கி உள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸை மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் காவலர்கள் கொடூரமாக அடித்துள்ளனர். இருவரையும் திமிரவிடாமல் 3 காவலர்கள் பிடித்து கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர். தந்தையையும் மகனையும் மாறி மாறி போலீஸ் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தம் சொட்ட சொட்ட 2 பேரையும் போலீஸ் கொடூரமாக தாக்கி உள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முதல் தகவல் அறிக்கையில் நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories:

>