×

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவவைக்கிடம்: அமைச்சர்கள் மருத்துவமனை வருகை.!!!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவவைக்கிடமாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான  செய்தியறிந்து, நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்துபோது, அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது என  கூறப்படுகிறது. உடனே அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், நெஞ்சு வலியில் இருந்து  விடுபட்ட அமைச்சர் துரைக்கண்ணு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அந்த  அறிக்கையில்,  அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரின் நுரையீரல் 90% பாதிக்கப்பட்டிருப்பது சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு  நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளது. எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் கருவி மூலம் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது. அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளது என்றும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை  தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. நுரையீரல் 90% பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை  பற்றி அறிய காவேரி மருத்துவமனைக்கு தமிழக அமைச்சர்கள் வருகை புரிந்துள்ளனர்.  

மு.க.ஸ்டாலின் டுவிட்:

திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், #Covid19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம்  தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.Tags : Durakkannu ,Ministers , Minister Durakkannu's health continues to be affected by corona: Ministers visit hospital
× RELATED அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்...