×

மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!!

புதுடெல்லி: மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில  இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என  தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் தற்போது தனிப்பட்ட  முறையில் இடஒதுக்கீடு வழங்கினால் அது மற்ற மாநிலங்களில் சட்ட சிக்கல்களை உருவாக்கும். 50% இடஒதுக்கீடு அல்லது குறைந்த பட்ச ஒதுக்கீடு 27% இந்த ஆண்டு    அமல்படுத்த முடியாது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது என மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான தீர்ப்பு கடந்த 15ம் தேதி ஒத்தி வைத்ததோடு, இந்த விவகாரத்தில் மனுதாரர், எதிர்மனுதாரர் என அனைவரும் கடந்த அக்டோபர் 20ம் தேதிக்குள்  எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாரர் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கடந்த  21-ம் தேதி எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். கடந்த 22-ம் தேதி அதிமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு குறித்து அனைத்து தரப்பு  வாதங்களையும் கேட்ட நிலையில் வரும் அக்டோபர் 26-ம் தேதி (இன்று) உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வாதித்த முதலே, இடைக்கால நிவாரணம் கோரிய இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று இரண்டே வரிகளில் தீர்ப்பை அளித்தது.


Tags : Supreme Court , 50% reservation for medical students cannot be ordered to be implemented this year: Supreme Court sensational verdict. !!!
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...