×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து  விசாரிக்கும் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்டார். அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு, சென்னையை விட சிறிய அளவிலான புதுச்சேரியில் நாளொன்றுக்கு 1200 பேர் என்ற அளவில் தொற்று பாதிப்புக்குள்ளாவது அபாயகரமானது.  புதுச்சேரியில் தடுப்பூசி, ரெம்டெசிவிர், வெண்டிலேட்டர், படுக்கை ஆகியவற்றின் இருப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.  புதுச்சேரியில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில்,   கொரோனா பாதிப்பை இவை அதிகரிக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வுகளோ அல்லது ஆதாரங்களோ இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கும் நாளை (இன்று) தள்ளிவைக்கப்பட்டுள்ளது….

The post கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puducherry govt ,Chennai ,Puducherry government ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு