×

தங்க நகைகள் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம்

மதுரை மாவட்டம் தந்தை சோனை மற்றும் தாய் சொரணம் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் வேல்முருகன். தன் பள்ளி படிப்பை மதுரையில் தொடங்கினார். அதன்பின் கல்லூரி படிப்பை மதுரை காமராஜர் பல்கலைகழகத்திலும் தொழிற்கல்வி மதுரை ஐ.டி.ஐயிலும் படித்து முடித்தார். மும்பை சென்று வேலை பார்க்கும் எண்ணம் இருந்ததால் அவர்  1993 ஆம் ஆண்டு மும்பைக்கு வந்து முல்லண்டில் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர் வைச்சராக பணியை தொடங்கினார்.  இப்படி பல வருடங்கள் பணி புரிந்து வந்த வேல்முருகன் தன் தீவிர உழைப்பாள் 2003 ஆம் ஆண்டு டோம்பிவிலி எம்.ஐ.டி.சி பகுதியில் சினிவாஸ் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தை தன் தம்பிகள் மற்றும் அவருடைய மனைவியுடன் தொடங்கினார்.  

இன்று வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவருடைய தீவிர உழைப்பால் 2013 ஆம் ஆண்டு ஏம் சொலுஷன் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. அங்கு ஹீட் சிங்க் என்ற எலக்டிரிக், எலக்ட்ரானிக் பயன்படுத்த சாதனத்தை தயாரிக்கிறார்கள். மற்றும் தங்க நகைகள் தயாரிக்க தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உதரி பாகங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.  2003 ஆம் வருடம் துவக்கப்பட்ட இந்த நிறுவனம் 2014 ஆம் வருடத்தில் இருந்து சொந்த இடத்தில் செயல்படுகிறது. வேலையுடன் சமூக பணியில் சிறந்து விளங்கியதால். திவா தமிழ் மக்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் 2012 ஆம் ஆண்டு திவா தமிழ்சங்கத்தை உருவாக்கினார். தமிழ் மக்கள் ஆதரவுடன் இவருக்கு சங்க செயலாளராகவும் பொறுப்பு வழங்கப் பட்டது. அதனுடன் திராவிட முன்னேற்ற கழகத்தின் திவா செயலாள ராகவும் இருந்து வருகிறார்.

Tags : Company , Manufacturer of machinery and spare parts needed to make gold jewelry
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...