புனேயில் பார்கள், ரெஸ்ட்ரான்ட்கள் இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

புனே: புனேயில் உள்ள பார்கள், ரெஸ்ட்ரான்ட்களை இரவு 11.30மணி வரை நீடித்து கமிஷனர் விக்ரம் குமார் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புனே மாநகராட்சியில் தற்போது இரவு 10 மணி வரை பார்கள் மற்றும் ரெஸ்ட்ரான்ட்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட்ரான்ட் உரிமையாளர்கள் நள்ளிரவு வரை கடை திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் விக்ரம் குமாரை வலியுறுத்தி வந்தனர். இதற்கு மாலை நேரத்தில் தான் வியாபாரம் சூடுபிடிக்கும். அந்த நேரமான இரவு 10 மணியுடன் கடையை மூட வேண்டும் என்ற உத்தரவால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் கமிஷனர் விக்ரம்குமார்   25ம் தேதி (நேற்று) முதல் பார்கள், ரெஸ்ட்ரான்ட்கள் திறக்கும் நேரத்தை இரவு 11.30 வரை நீடித்து உத்தரவிட்டார். அவர் தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: பார்கள் மற்றும் ரெஸ்ட்ரான்ட்களை 50 சதவீத இருக்கைகளுடன் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றி இரவு 11.30 மணி வரை செயல்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநகராட்சியின் இந்த முடிவை நகர ரெஸ்ட்ரான்ட் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.  இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அரவிந்த் ஷின்டே கூறுகையில் ` மாநகராட்சி கமிஷனரின் இந்த உத்தரவு வரவேற்க தக்கது. 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என்ற உத்தரவால் கடைகளுக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் வருவார்கள்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories:

>