×

ஆத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலம்

ஆத்தூர்: ஆத்தூர் ஒன்றியம், அம்மம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் வசிஷ்ட நதி குறுக்கீடுவதால், அங்குள்ள தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மம்பாளையம், நரிக்குறவர் காலனி முட்டல் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள தரைமட்ட பாலத்தை, உயர்மட்ட பாலமாக கட்டும் பணி துவங்கியது. பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பாலம் மிகவும் மோசமான முறையில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாகனங்கள் செல்லும்போது பல இடங்களில் அதிர்வுகள் ஏற்படுகிறது. மேலும், மழைநீர் வெளியேற வழி இல்லாததால், பாலத்தில் மழைநீர் தேங்குகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதின் பேரில், பாலத்தின் சில இடங்களில் கான்கிரீட் தடுப்புகளை உடைத்து மழைநீர் வெளியேற வழி செய்தனர். மேலும், தரமற்ற முறையில் பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்து கேட்டபோது அப்படித்தான் இருக்கும் என அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து பாலத்தின் உறுதித்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Attur , Poorly constructed bridge near Attur
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...