×

டிரம்பிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு..!!

வாஷிங்டன்: டிரம்பிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரத்தில் ஈடுபட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரத்தில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளனர்.

புளோரிடாவில் ஜோபிடனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, மியாமியில் தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தனர்.

டிரம்ப் வெளியேறிய தொலைக்காட்சி பேட்டியில் உங்களுடைய 2-வது ஆட்சியில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு கூட பதில் கூற முடியாமல் சென்றவரிடம் இனியும் ஆட்சியை செல்ல விடமாட்டோம் எனக் ஒபாமா கூறியுள்ளார். மேலும், டிரம்பிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு, முன்னதாக கரோலினா மாகாணத்தில் நடந்த   பறக்கும் பிரசாரத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஊடகங்களில் கொரோனா என்ற சொல்லை மக்கள் அதிகளவு கேட்டு உள்ளதாகவும், அதிபர் தேர்தலுக்கு பிந்தைய நாளான நவம்பர் 4ம் தேதி முதல் யாரும் அந்த சொல்லை கேட்கும் நிலை வராது என தெரிவித்து உள்ளார்.

Tags : Trump ,Barack Obama ,US ,Corona , Trump, Corona, former president, Obama, indictment
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...