கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு அனுமதி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரிக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இ-பாஸ் இல்லாமலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் பெற்றும் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் சுற்றுலாப்பயணிகள் கண்டுரசிக்க பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா தோட்டம், கோக்கர்ஸ் வாக் ஆகிய 4 இடங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து இடங்கள் மூடப்பட்டுள்ளன. ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை- சைக்கிள் சவாரியும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரிக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவுப்படி, சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அனுமதி அளித்துள்ளார். இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>