வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிக்கையில் தெரிவிப்பதாவது:

* கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

* தமிழக கடலோர மாவட்டங்கள் நீலகிரி, கோவை, புதுவையிலும் நிலவும் வளிமண்டல சுழற்சியால் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

* அக்டோபர் 27, 28ம் தேதி மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

* மீனவர்கள் அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மேலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி !

* வடக்கு அந்தமான் பகுதியில் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்.

* வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது

ஏற்கனவே வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.. தற்போது, தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>