×

பண்டிகை காலங்களில் எல்லை வீரர்களை நாம் நினைவுக் கொள்ள வேண்டும்: விஜயதசமி வாழ்த்து தெரிவித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..!!

டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன் என்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். மேலும், தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பன் என்பவரிடம் பிரதமர் மோடி தமிழில் பேசி அசத்தி உள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

* நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்

* பண்டிகை கொண்டாட்டங்களின் போது தனி மனித இடைவெளியை கடைபிடிப்போம்

* காதி விற்பனை நிலையத்தில் விற்கப்படும் முகக்கவசங்களை மக்கள் அதிகம் வாங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

* உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம்

* விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்தாண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது

* பண்டிகைகள் கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

* கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்

* தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பன் என்பவரிடம் பிரதமர் மோடி தமிழில் பேசினார். வணக்கம் நல்ல இருக்கீங்களா? என தமிழில் ஒருசில வார்த்தைகளை பேசி பிரதமர் மோடி அசத்தல். தூத்துக்குடியில் தமது முடி திருத்தும் நிலையத்தில்  ஒரு நூலகத்தை நிறுவியுள்ளார் பொன் மாரியப்பன். இந்த எண்ணம் எப்படி வந்தது என அவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பிரதமர் மோடி வினவி பாராட்டியுள்ளார்.

* தூத்துக்குடி பொன் மாரியப்பன் பேசும்போது தான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால் வாழ்க்கையை படிக்க நூலகம் அமைத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.  

* மேலும், உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும் என மாரியப்பனிடம் பிரதமர் தமிழில் கேள்வி கேட்டார். வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும். வாழ்க்கைக்கான வழிகாட்டி நூல் திருக்குறள் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

* நாடு முழுவதும் பல வழிபாட்டு தலங்களை நிறுவி அவற்றை மேன்மையடையச் செய்தவர் சங்கராச்சாரியார். அவர், தனது பக்தி மற்றும் வழிபாடு மூலம் நாட்டை ஒன்றுப்படுத்தியவர்.

* இந்த பண்டிகை காலங்களில் கூட நம் எல்லைகளை காக்கும் நம் துணிச்சலான வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றை நினைவில் வைத்த பின்னரே நாம் கொண்டாட வேண்டும். நம் இந்தியாவின் இந்த துணிச்சலான மகன்களுக்கும் மகள்களுக்கும் நாம் ஒரு விளக்கு ஏற்ற வேண்டும். முழு தேசமும் அவர்களுடன் உள்ளது.

* நாட்டில் கிட்டத்தட்ட 90% பென்சில் ஸ்லேட்டுக்கான தேவை காஷ்மீர் பள்ளத்தாக்கால் பூர்த்தி செய்யப்படுகிறது, மேலும் புல்வாமாவுக்கு அதில் பெரிய பங்கு உள்ளது. ஒரு காலத்தில், நாங்கள் பென்சில்களுக்காக விறகுகளை இறக்குமதி செய்வோம், ஆனால் இப்போது புல்வாமா இந்த துறையில் தேசத்தை தன்னம்பிக்கை கொள்ள வைக்கிறது

* புதிய வேளாண் சட்டங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலனடைகின்றனர். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மக்காச்சோள விவசாயிகளுக்கு தங்களுடைய விலையைத் தவிர போனஸ் தொகையும் கிடைத்துள்ளது. விவசாயிகளின் தொழில்நுட்பம் மூலம் புதிய வியாபார வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று அவர் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி உள்ளார்.

Tags : Modi ,season ,speech ,Mann Ki Baat , Festival, Frontier Soldiers, Mann Ki Baat Show, Prime Minister Modi, Speech
× RELATED கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்