×

ட்வீட் கார்னர்...நலமாக இருக்கிறார்!

திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், சிகிச்சைக்குப் பின்னர் தற்போது நலமாக  உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், கபில் தனது  ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து தகவல் பதிந்துள்ளார். இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கபில்தேவை  சந்தித்த முன்னாள் வீரர் சேதன் ஷர்மா, ‘அறுவை சிகிச்சைக்குப் பிறகு கபில் அண்ணா தற்போது நலமாக இருக்கிறார். உடன் அவரது மகள் அமியா’  என்று ட்விட் செய்துள்ளார்.

Tags : Corner , Cricket star Kapil Dev, who has been admitted to hospital due to a sudden heart attack, is currently recovering after treatment.
× RELATED மேரீஸ்கார்னர் அருகே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி