வெளிநாட்டு நிதி நிறுவனத்தில் 600 கோடி கடன் வாங்கி தருவதாக 40 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா (58). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர்  சஞ்சீவி (63). இவரும், இவரது மகன் இமானுவேலும் (30) சேர்ந்து மாலத்தீவில் 200 கோடி மதிப்பிலான கட்டுமான பணி டெண்டர் எடுத்து தருவதாக  ஜீவாவிடம் தெரிவித்துள்ளனர். மேலும்வெளிநாட்டு தனியார் நிதி நிறுவனங்களிடம் 600 கோடி கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை  கூறியுள்ளனர். இதற்கு 40 லட்சம் முன் பணம் தர வேண்டும் என கேட்டனர். 600 கோடி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜீவா கடந்த  ஆண்டில் 40 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்கள் 600 கோடி கடன் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுபற்றி ஜீவா, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்  அளித்தார். இதையடுத்து கோவையில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>