வில்லியனூரில் மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு: 3 பேரை பிடித்து விசாரணை

வில்லியனூர்: புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பெட்ரோல் பங்க் அருகே சந்தோஷ்குமாருக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது.  நேற்று இரவு 7.15 மணியளவில் மதுக்கடை பாரில் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் திடீர் என கடையின் முன்பக்க சுவரில் பயங்கர சத்தத்துடன்   வெடிகுண்டு வெடித்ததது.  இதனால் கடையின் முன்பக்கம் மதுவாங்க நின்றவர்களும், பாரில் மது அருந்திக் கொண்டருந்தவர்களும் நாலாபுறமும்  சிதறி ஓடினர். இதுகுறித்த தகவலின்பேரில், வில்லியனூர் போலீசார் சென்று பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து கடையில்  உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>