×

என் மீது வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன்: திருமாவளவன் பேட்டி

சென்னை: என்மீது வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  பெண்களை இழிவு செய்யும்  மனுதர்மம் நுழைய தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னையில்  விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மனுதர்ம நூலை  தடைசெய்யக்கோரி கோசம் எழுப்பினர். போராட்டத்தின் போது திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் பேசிய 40 நிமிட உரையை  பெண்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பை சார்ந்த தாய்மார்களும் அந்த உரையை  கேட்க வேண்டும். 1920ல் பெரியார் இந்த மனு நூலை எரித்தார். புரட்சியாளர் அம்பேத்கர் இந்த மனு நூலை எரித்தார்.

இவர்களின் வழியில் தான் மனுநூலை தடை செய் என்ற போர் குரலை விடுதலை சிறுத்தைகள் இன்று எழுப்பி உள்ளது. இவர்களின் நோக்கம்  என்னை இழிவுபடுத்துவது அல்ல. நான் இடம்பெற்றிருக்கும் திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பது தான் நோக்கம். பெரியார், அம்பேத்கர்  சொன்னதை தான் திருமாவளவன் சொல்லி இருக்கிறார் என்று சனாதன கும்பலுக்கு திமுக சவுக்கடி கொடுத்திருக்கிறது. தோழமை கட்சிகள்  அனைத்தும் திருமாவளவன் மனுநூலில் என்ன கூறியிருக்கிறதோ அதையே மேற்கோள் காட்டியிருக்கிறார் என்று கூறியிருக்கின்றன. ஆனாலும், கூட  அதிமுக அரசு மத்திய அரசுக்கு சேவை செய்யக்கூடிய அரசாக இருப்பதால் என்மீது வழக்கு தொடுத்திருக்கிறது. நான் அதை வரவேற்கிறேன்.  நீதிமன்றத்திற்கு வாருங்கள் யார் பெண்களை இழிவு செய்கிறார்கள் என்பது தெரியும்.

திருமாவளவன் பேசியது குற்றம் என்றால் சனாதன கும்பல் அம்பேத்கரை கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. எனவேதான் பெண்களை  இழிவு படுத்தும் மனுநூலை விமர்சித்தோம். தொடர்ந்து விமர்சிப்போம். நூலை தடை செய்கிற வரையில் எங்களின் அறப்போர் தொடரும்.  சனாதனத்தை எதிர்த்து போராடும் பெரியார் மண் இது என்று மீண்டும் நிரூபித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.


Tags : interview ,Thirumavalavan , I welcome the lawsuit against me: Thirumavalavan interview
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...