×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், விருதுநகர் வடக்கு  மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.வி.கே (எ) வி.கந்தசாமி தலைமையில், அதிமுகவைச் சேர்ந்த  சிவகாசி தெற்கு ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகேஸ், டி.குருமூர்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்  கே.இளங்கோவன்-திருத்தங்கல் நகராட்சி கவுன்சிலர்கள் துரைப்பாண்டி, மாரியப்பன் மற்றும் ஞான ரஞ்சித்ராஜா, இசக்கிராஜா, ஆர்.ராஜா உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட அதிமுகவினர்  தி.மு.க.வில் இணைந்தனர்.  அப்போது விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,  சிவகாசி நகரச் செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், திருத்தங்கல் நகரச் செயலாளர் எம்.காளிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : executives ,AIADMK ,DMK ,MK Stalin , AIADMK executives joined the DMK in the presence of MK Stalin
× RELATED அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் ராஜேஸ்குமார் வரவேற்றார்