×

6 மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு: நேபாள நில பகுதிகளையும் கபளீகரம் செய்கிறது சீனா: இந்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை

புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக இந்திய-சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வருகின்றது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்  இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. எல்லையில் இருநாட்டு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நேபாளத்தின் எல்லைப் பகுதிகளையும் சீனா ஆக்கிரமித்து வருவதாகவும், அந்நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ள 7  மாவட்டங்களில் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாகவும், இந்திய புலனாய்வு அமைப்புக்கள் டெல்லியில் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘நேபாள எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீன ராணுவம் வேகமாக முன்னேறி ஆக்கிரமித்து  வருகிறது.

நேபாளத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனாவின் இந்த நில விரிவாக்க நடவடிக்கையை காப்பற்ற   முயற்சிக்கிறது. நேபாளத்தில் உள்ள  டோலக்கா, கோர்கா, தர்ச்சுலா, ஹம்லா, சிந்துபால் சவுக், சங்குவசபா மற்றும் ரசுவா மாவட்டங்களில் உள்ள நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது  பற்றி நேபாள பிரதமர் சர்மா ஒலியின் கவனத்துக்கு அந்நாட்டு சர்வே துறை எடுத்து சென்றபோது, அதை அவர் அலட்சியப்படுத்தி இருக்கிறார்,’ என்று  கூறப்பட்டுள்ளது.

‘ரா’ தலைவர் சந்திப்பின் பின்னணி
இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் தலைவர் சமந்த் குமார் கோயல், சில தினங்களுக்கு முன் நேபாளத்துக்கு சென்று, அந்நாட்டு பிரதமர் சர்மா  ஒலியை திடீரென சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டாலும், தூதரக விதிமுறைகளை மீறி இந்திய  உளவுத்துறை தலைவரை சர்மா ஒலி சந்தித்தது தவறு என அந்நாட்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இந்நிலையில், இந்த சந்திப்பின்போது சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி தகவல்களைதான் சர்மா ஒலியிடம் கோயல் பகிர்ந்து இருக்க வேண்டும் என்று  தற்போது கருதப்படுகிறது.  



Tags : China ,districts ,spy agencies ,Nepal ,Indian , Occupy 6 districts: Nepal occupies territory China: Indian spy agencies warn
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...