×

கேரளாவில் அதிசயம் சாமி பாட்டு கேட்கும் முதலை: பிரசாதம் மட்டுமே சாப்பிடும்; கறி, மீன் எல்லாம் உவ்வ்வே...

திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில் நடையில் படுத்திருந்த முதலை, பிரார்த்தனை பாடல்களை பாடியதும் மீண்டும் குளத்துக்குள் சென்ற சம்பவம்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், காசர்கோடு அருகே கர்நாடக மாநிலத்தை ஒட்டி கும்பளா அனந்தபுரத்தில் அனந்த  பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இது, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்கு மூலக்கோயில் எனவும் கூறப்படுகிறது. இக்கோயில்  குளத்தில் நீண்ட காலமாக ஒரு முதலை வசித்து வருகிறது. இதை பக்தர்கள் தெய்வமாக நம்பி வழிபட்டு வருகின்றனர். ‘பபியா’ என அழைக்கப்படும்  இந்த முதலை தினமும் காலை, மதியம் கோயில் மேல்சாந்தி கொடுக்கும் பிரசாத சாதத்தை மட்டுமே சாப்பிடும். பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தை  குளத்தருகே கொண்டு சென்று ‘பபியா’ என மேல்சாந்தி அழைத்தவுடன் வந்து சாப்பிட்டு செல்லும்.

இந்த கோயில் குளத்தில் முதலை எப்படி வந்தது என யாருக்கும் தெரியவில்லை. குளத்தையொட்டி குகை போன்ற ஒரு பகுதி உள்ளது. இது,  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வரை செல்வதாகவும் நம்பப்படுகிறது. இந்த முதலை தினமும் கோயில் நடை சாத்தப்பட்டவுடன், குளத்தில்  இருந்து மேலே வந்து படிக்கட்டில் படுத்திருப்பது வழக்கம். அதிகாலையில் ேகாயில் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டவுடன் மீண்டும் குளத்துக்குள்  சென்றுவிடும். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் மேல்சாந்தி சுப்ரமணிய பட் கோயிலை திறந்தபோது ‘பபியா’ முதலை  கோயில் நடை அருகே படுத்திருந்தது.

உடனே அவர் ‘புருஷ சூக்தம்’, ‘விஷ்ணு சூக்தம்’ பிரார்த்தனை பாடல்களை பாடினார். சிறிது நேரத்தில் ‘பபியா’ வழக்கம்போல குளத்துக்குள் சென்று  விட்டது. நடைமுன் முதலை ‘பபியா’ கிடக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது, இது வைரலாக பரவி  வருகிறது.

* இந்த முதலை கறி, மீன் எதுவும் சாப்பிடாது.
* இதற்கு 75 வயதாகிறது என நம்பப்படுகிறது.
* கோயில் நடையருகே படுத்திருக்கும் முதலை.



Tags : Kerala ,Sami ,Curry , Crocodile listening to the miracle Sami song in Kerala: eating only offerings; Curry, fish, everything ...
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...