×

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு: மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்குகிறது

புதுடெல்லி: மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று  நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய  ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர  வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மற்றும் மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பின் கேவியட்  மனு ஆகியவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதன் மீதான தீர்ப்பை கடந்த 15ம் தேதி ஒத்திவைத்தது.

இதைத்தொடர்ந்து ஓபிசி பிரிவினருக்கு நடப்பு ஆண்டில் 50சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை என்றும், நீதிமன்றம்  உத்தரவிட்டால் உடனடியாக திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணாவும், அதேப்போன்று  ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு  எதையும் பின்பற்றாமல் அவசர கதியில் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதனால் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்குவது  தொடர்பான முழு விவரம் கொண்ட விரிவான அறிக்கையை அக்டோபர் 27ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட  வேண்டும் என கேவியட் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சனும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை பிரமாணப்  பத்திரமாக தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வரராவ் தலையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பு  வழங்க உள்ளது. இதையடுத்து மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு ஆண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது தெரியவரும்.  இதில் மருத்துவ கலந்தாய்வு நெருங்க உள்ள நிலையில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்பு மிகுந்த  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : session ,Supreme Court , 50% reservation for OBC section in medical study Supreme Court verdict tomorrow: Three-judge session offers
× RELATED இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக நீதியை...