×

ஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

அபுதாபி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சு தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 


Tags : IPL T20 ,Kolkata ,Delhi Capitals , IPL T20: Kolkata beat Delhi Capitals by 59 run
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள்...