×

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி

லக்னோ : உத்தரப் பிரதேச மாநில அரசு முருங்கையின் மகத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்க புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளது.அதன்படி கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக 1 கோடியே 7 லட்சத்து கோடி முருங்கை நாற்றுகளை உற்பத்தி செய்து அவற்றை மாநிலம் முழுவதும் நடுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இது குறித்து மாநில வனத்துறையினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ஒவ்வொரு கிராமத்திலும் முருங்கையின் சத்துகள் குறித்து விளக்கிச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினைச் சரிசெய்வதற்காக முருங்கைக்காய் பயன் படும் விசயங்களைச் சொல்லி அவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ” எனக் கேட்டுக் கொண்டுள்ளளார்.

Tags : household ,villages ,UP ,Chief Minister , Drumstick Tree, UP Chief Minister, Yogi Adityanath
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...