×

பெரம்பலூர் அருகே கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டை இல்லை : ஆய்வுக்கு பின் தகவல்

பெரம்பலூர், :பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் ஏரியில் கட ந்த 21ம் தேதி ஏரி குடிமராமத்து பணிகள் நடைபெற்றபோது, முக்கால்அடி முதல் 1 அடி வரையிலான விட்டம் கொண்ட 80 வெளிர் மஞ்சள் நிற உருண்டைகள் மண்ணில் புதையுண்டு இருப்பது தெரியவந்தது. இது 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகள் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி திருச்சி அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவகுமார் மற்றும் அரியலூர் மாவட்ட புதைஉயிரி அருங்காட்சியக (பொ) காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் குன்னம் பகுதியில் குடிமராமத்து நடை பெற்ற ஏரி மற்றும் குன்னம் ஆனைவாரி ஓடையில் நேற்று கள ஆய்வு செய்தனர்.பின்னர் இதுகுறித்து காப்பாட்சியர் சிவகுமார் அளித்த பேட்டி: குன்னம் ஏரியில் குடிமராமத்து பணியின்போது கண்டறியப்பட்ட உருண்டைகள் எதுவும் டைனோசர் முட்டைகள் கிடையாது.

அதில் 3 உருண்டைகளின் மையத்தில் அமோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் உள்ளது. குன்னம் பகுதியில் பல இடங்களில் அமோனைட் மற்றும் கடலில் வாழும் உயிரினத்தின் ஓடுகளான கிளிஞ்சல்கள் அதிகம் கண்டறியப்பட்டு வருகிறது. அரசு அருங்காட்சியக ஆணையர் சண்முகத்திற்கு களஆய்வு தொடர்பாக முழுமையான ஆய்வறிக்கை அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : inspection ,Perambalur , Perambalur, dinosaur egg
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...