×

பனி சிறுத்தைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ உரை

டெல்லி : பனி சிறுத்தை திட்டத்தின் கீழ் அதன் வாழ்விடத்தையும், பனி சிறுத்தையையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறி உள்ளார்.கடந்த 2009-ம் ஆண்டு பனி சிறுத்தைத் திட்டம் தொடங்கப்பட்டது. 2020 சர்வதேச பனி சிறுத்தை தினத்தை முன்னிட்டு காணொலி காட்சி வழியே உரையாடிய திரு.சுப்ரியோ, பனி சிறுத்தை வாழ்விட பாதுகாப்புக்காக இயற்கை வன மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாக கூறினார். உள்ளூர் பங்களிப்பாளர்களைக் கொண்டு இயற்கை வன மேலாண்மை பங்கெடுப்பு அடிப்படையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து உலகளாவிய பனி சிறுத்தை மற்றும் சூழல் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு தரப்பாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த காணொலி காட்சி சந்திப்பில் பேசிய  திரு.சுப்ரியோ, இந்தியா  மூன்று பெரிய இயற்கை வனபகுதிகளை அடையாளம் கண்டிருப்பதாகக்கூறினார். இமாசலப்பிரதேசம்–மற்றும் லடாக் முழுவதும் உள்ள ஹெமிஸ் என்ற நடுத்தர நிலப்பகுதி, உத்தரகாண்ட்டில் நந்தா தேவி-கங்கோத்ரி, சிக்கிம் மற்றும் அருணாசலப்பிரதேசம் முழுவதும் உள்ள காங்செண்ட்ஸோங்கா ஆகிய மூன்று பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பனி சிறுத்தைகளின் தொகையை அதிகரிக்கும் என்றும் சுப்ரியோ உறுதி அளித்தார்.

Tags : Babul Supriyo , Snow Leopard, Union Minister, Babul Supriyo, Speech
× RELATED மேற்குவங்க சட்டமன்ற இடைத்தேர்தல்:...