×

இணையவழி தாக்குதல் எதிரொலி : கொரோனா தடுப்பூசி பரிசோதனை மையமான டாக்டர் ரெட்டி ஆய்வகம் மூடப்பட்டது

சென்னை, :இணையவழி தாக்குதல் காரணமாக பிரபல மருத்துவ பரிசோதனை மையமான ரெட்டி லேப் தனது ஆராய்ச்சி யூனிட்டுகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகளும், சோதனைகளும் நடந்து வருகின்றன. இதில் குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த வரிசையில் ரஷ்யாவை சேர்ந்த மிகப்பெரிய மருந்து நிறுவனம் ‘’ஸ்புட்னிக் வி ‘’என்ற மருந்தை கொரோனா தடுப்புக்காக தயாரித்துள்ளது. அந்த மருந்தின் இறுதிகட்ட ஆய்வுகள் நடந்துவருகின்றன. மனிதர்களுக்கு அந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தும் ஆய்வுகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

 இந்த மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய ரஷ்யாவின் டிரக் மேக்கர் அண்ட் ரஷ்யன் டிரைக்ட் இன்வெஸ்மெண்ட் பண்ட் நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதையடுத்து இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் இறுதி கட்ட ஆராய்ச்சியை  மேற்கொள்ள டாக்டர் ரெட்டி லேபுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
 ஆராய்ச்சிகள் முடிவடைந்து கொரோனா தடுப்பு மருந்தான ’ஸ்புட்னிக் வி’யை இந்தியாவில் பயன்படுத்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி டாக்டர் ரெட்டி லேபுக்கு 100 மில்லியன் (10 கோடி) தடுப்பூசிகள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

 இந்த நிலையில், ஆராய்ச்சிக்கான அனுமதி கிடைத்த மறுநாளே டாக்டர் ரெட்டி லேபுக்கு இணையவழி தாக்குதல்கள் வரத்தொடங்கின. அதன் மூலம் லேபின் பல்வேறு தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக டாக்டர் ரெட்டி லேப்புக்கு தெரியவந்தது. இதையடுத்து, லேபின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. லேபின் பணிகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் தொடரும் என்று டாக்டர் ரெட்டி லேபின் தலைமை தகவல் அதிகாரி முகேஷ் ரதி தெரிவித்துள்ளார்.


Tags : Echo ,Reddy ,cyber attack ,lab ,Corona Vaccine Testing Center , ECommerce, attack, echo, corona, block
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்