×

ஜார்கண்ட்டில் வீட்டில் வளர்க்கப்பட்ட பாரசீக பூனை கொலை? :போலீசார் வழக்குபதிவு

ராஞ்சி,:வீட்டில் வளர்க்கப்பட்ட பாரசீக பூனை மர்மமான முறையில் இறந்ததால், இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த சனா மாலிக் மற்றும் ஷபீர் உசேன் ஆகியோர் ஒரு பாரசீக பூனையை வளர்த்து வந்தனர். இந்த பூனையை கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்கள், லோயர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரசீக பூனையை மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தோம். கடந்த 20ம் தேதி முதல் பூனையை காணவில்லை. இப்போது அந்த பூனையின் சடலம் வண்டி நிறுத்தும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பூனையை பார்த்தபோது, ​​அதன் கழுத்தை யாரோ நெரித்துக் கொன்றதாக தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து லோயர் பஜார் போலீசார், தற்போது, ​​விலங்குகளை கொல்வது மற்றும் விலங்குக் கொடுமைச் சட்டத்தின் 428 மற்றும் 429 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Persian ,Jharkhand , Jharkhand, Persian cat, murdered
× RELATED ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு