×

கனமழை கொட்டியதால் பெங்களுருவில் வெள்ளப்பெருக்கு: கர்நாடகத்தில் கனமழை நீடிக்கும் அறிவிப்பால் மக்கள் அச்சம்

பெங்களூரு: பெங்களுருவில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக மாறியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். கர்நாடகத்தில் கனமழை வலுத்துள்ள நிலையில் பெங்களூரு நகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் லால்பாக் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஓசேஹாரஹள்ளி, குமாரசாமி லேஅவுட் டாத்ரியா நகர், மடிவாலா, சாந்தி நகர், கெங்கேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரு புறநகரில் ஓசேஹாரஹள்ளி என்ற இடத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் குழந்தைகளை தூக்கி கொண்டு பலர் அண்டை வீட்டு மாடிகளை தேடி ஓடும் நிலை ஏற்பட்டது. பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை ஒன்றை தூக்கி கொண்டு வெள்ளத்தில் மிதந்து சென்ற ஒருவர் அண்டை வீட்டாரிடம் குழந்தையை ஒப்படைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரம், புறநகரில் நேற்று 3 மணி நேரத்தில் 13.2 மி.மீ மழை பெய்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடம், தெற்கு மற்றும் வடக்கு கர்நாடகம் உள்மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று கூறியுள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் கர்நாடகத்தில் 11,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

Tags : Floods ,Bangalore ,announcement ,Karnataka , Bangalore, heavy rains, floods
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...