×

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை: 7.5% உள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு 5 வாரங்களாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார் என முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 40 நாட்களாகியும் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வு என்பது பலிபீடமாக மாறி இருக்கிறது. நீட் தேர்வில் தொடர்ந்து குழப்பமான நிலை நீடித்து வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது திமுகவின் கொள்கை என குறிப்பிட்டுள்ளார்.



Tags : Karunanidhi ,Jayalalithaa ,Stalin ,Tamil Nadu , Karunanidhi, Jayalalithaa regime, NEET election, M.K. Stalin
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...