×

தமிழகத்தில் கொரோனா சூழல் குறித்து வரும் 28ஆம் தேதி ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தது ஆலோசிக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசிக்கிறார்.

கொரோனா பரவல் அதிகரித்த பின்பு ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதலமைச்சர் ஆலோசித்தே அதன் பிறகே தமிழக அரசு தனது முடிவுகளை அறிவிக்கிறது. பல்வேறு உத்தரவுகள் என்பது அதன் மூலமாக பிறப்பிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு என்பது வருகின்ற 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் இதனை நீட்டிப்பதா இல்லையா, வேறு தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரு கட்டாயத்தில் இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்களுடைய நலனை கருதி இந்த தளர்வுகள் என்பது தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் தளர்வுகள், கொரோனா பரவலும் ஒருசில நாட்களில் மீண்டும் அதிகரித்து வரக்கூடிய சூழலில் மேலும் கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசித்து தமிழக முதலமைச்சர் தங்களது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,collectors ,team ,Tamil Nadu , Corona, CM, Consulting
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...