×

மீண்டும் 100 அடியை நெருங்கியது மேட்டூர் நீர்மட்டம்

சேலம்: தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 99.39 அடியாகவும், நீர்இருப்பு 64.05 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,129 கனஅடியிலிருந்து 18,694 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 9,000 கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 18,000 கனஅடியிலிருந்து 20,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.


Tags : Mettur , Mettur water level, dam
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்