×

16 மாநிலங்களுக்கு 6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு

புதுடெல்லி: தமிழகம் உட்பட 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ₹6,000 கோடியை மத்திய அரசு கடன் வாங்கி வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், ஜிஎஸ்டி வருவாய் குறைவதால் இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்து வருகிறது. இதனால், மாநிலங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தவித்து வருகின்றன. இதனால், ‘சந்தையில் இருந்து ₹1.1 லட்சம் கோடி திரட்டி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும்,’ என மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்தது.

 அதன்படி, மத்திய அரசு கடன் மூலம் திரட்டிய ரூ.6000 கோடியை ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ளது.



Tags : states , 6,000 crore GST compensation to 16 states
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்