×

தடுப்பூசி விஷயத்தில் ஏழைகளுடன் விளையாடாதீர்கள் அரசுக்கு கமல் எச்சரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ஏழைகளுடன் விளையாடாதீர்கள் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள். தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளி தெளிக்கும் வாக்குறுதி அல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாட பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாட துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Kamal ,government ,poor , Kamal warns government not to play with poor in vaccination case
× RELATED புயல் நிவாரண முகாம்களில் அரசு எந்த...