இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

நாகை:  நாகை முதல் கோடியக்கரை வரையிலான கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் அதிநவீன ரோந்து கப்பல் மூலம் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது 75 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு படகில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து அந்த படகின் அருகே சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், படகில் இருந்த 6 மீனவர்கள் இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.இதன்பின், மீனவர்கள் 6 பேரை கைது செய்தனர்.

Related Stories:

>