×

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: திருவண்ணாமலை மாணவர் முதலிடம்

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.  கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. நடப்பாண்டில் 4,390 இடங்கள் உள்ளன. இதற்கு மொத்தம் 48,820 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, பொதுப்பிரிவு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் வெளியிட்டார். தரவரிசை பட்டியலில் மொத்தம் 31,410 மாணவர்கள் இடம் பெற்றனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் 199.50 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிவாசன் 199.25 கட்ஆப் மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், நாமக்கல் மாணவி புஷ்கலா 199 கட்ஆப் மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பெற்றனர்.

மேலும், மொத்த மாணவர்களில் 86.2 சதவீதம் பேர் வேளாண்மை பட்டப்படிப்பை முதல் விருப்ப பாடமாக தேர்வு செய்துள்ளனர்.  சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கான தரவரிசை பட்டியல் 28-ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.


Tags : Release of Agricultural University Rankings: Thiruvannamalai Student First
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...