×

ஆவினில் சிறப்பு இனிப்புகள்

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 வகையான சிறப்பு இனிப்புகள் விற்பனையை விருகம்பாக்கத்தில் உள்ள ஹைடெக் பார்லரில் ஆவின் நிர்வாக இணை இயக்குநர் மணிவண்ணன், மார்க்கெட்டிங் மேஜேனர் ரமேஷ் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். பின்னர் ஆவின் நிர்வாக துணை இயக்குநர் மணிவண்ணன் கூறியதாவது: ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 5 வகையான சிறப்பு இனிப்பு விற்பனையை ஆவின் துவங்கியுள்ளது. ஸ்டப்டு டிரை ஜாமூன் (250 கிராம்) ₹190, நட்டி மில்க் கேக் (250 கிராம்) ₹190, ஸ்டப்டு மோதி பாக் (250 கிராம்) 190, காஜு பிஸ்தா ரோல் (250 கிராம்) 225, பிளேவர்டு மில்க் பர்பி (250 கிராம்) 165க்கு கிடைக்கும்.

மேலும் மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய 500 கிராம் எடை கொண்ட இனிப்புகள் 375 விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தமிழக அரசின் கோவிட் - 19 வழிகாட்டுதலின்படி சுகாதாரமான முறையில் தரமான ஆவின் நெய் பயன்படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்

Tags : Special desserts in the spirit
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100